தமிழ்நாடு

tamil nadu

கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்டுவது கண்டனத்துக்குரியது - ஜி.கே.வாசன்

By

Published : Jul 6, 2021, 6:24 PM IST

Updated : Jul 6, 2021, 7:25 PM IST

கர்நாடக அரசு தென்பெண்ணை ஆறு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது கண்டனத்துக்குரியது என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன்
செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன்

கடலூர்: கர்நாடக அரசு தென்பெண்ணை ஆறு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது கண்டனத்துக்குரியது என தமிழ் மாநில காங்கிரசின் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

கடலூரில் தமிழ் மாநில காங்கிரசின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னர் அவர் செய்தி்யாளர்களிடம் பேசுகையில், “ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல. இந்தப் பிரச்னையில் மத்திய அரசும், வெளியுறவுத் துறையும் உடனடியாக தலையிட்டு மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

மீனவர்களை தாக்குவது மட்டுமல்லாமல், படகுகள், வலைகளை நாசம் செய்யும் வேலையிலும் இலங்கை ராணுவம் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது.

செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன்
பெட்ரோல், டீசல் உயர்வை குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் வரிகளைக் குறைக்க வேண்டும். கர்நாடக அரசு தென்பெண்ணை ஆறு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டை புறந்தள்ளி, கர்நாடக மாநிலத்தை மட்டுமே கவனத்தில் கொள்ளும் ஒன்றிய அரசின் செயல் ஏற்புடையதல்ல.தற்போது கர்நாடக அரசு தென் பெண்ணையாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டுவது தமிழ்நாட்டிற்கான நீர்வரத்தை குறைத்துவிடும்.
இதனால் வேலூர், கடலூர், விழுப்புரம் உட்பட ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்படும். தமிழ்நாட்டின் நீர்நிலைகளை நிலைநாட்ட ஒன்றிய அரசின் நீர்நிலை மேலாண்மை வலியுறுத்த வேண்டும்” என்றார்.
Last Updated :Jul 6, 2021, 7:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details