தமிழ்நாடு

tamil nadu

Due To Heavy Rain: கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

By

Published : Nov 18, 2021, 12:19 PM IST

கடலூரில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் (Due To Heavy Rain) பள்ளி, கல்லூரிகளுக்கும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் (Chidambaram Annamalai University) இன்று (நவ. 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் கனமழை, கடலூர் மழை பாதிப்பு, HEAVY RAIN in cuddalore
Due To Heavy Rain

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழை இல்லாத நிலையில் நேற்று (நவ. 17) இரவு தொடங்கிய கனமழை, இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளான சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, புவனகிரி, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் கனமழை தொடர்வதால் (Due To Heavy Rain) பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் விடுமுறை அளித்துள்ளார்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலூர்

இதேபோன்று, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், பல்கலைக்கழகத்திற்கு விடுமுறையை அறிவித்துள்ளார். தொடர்ந்து, கனமழையின் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் ஆறுபோல் ஓடி வருகின்றது.

குறிப்பாக, இன்று காலை 8:30 நிலவரப்படி மாவட்டத்தில் தொழுதூர், மேமாத்தூர் பகுதிகளில் 6 செ.மீ மழையும், கடலூர், குப்பநத்தம் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ., மழையும் என மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் 4 செ.மீ.,க்கு மேல் மிகாமல் மழைப் பதிவாகி உள்ளது.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி: இந்த மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details