தமிழ்நாடு

tamil nadu

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

By

Published : Apr 9, 2019, 9:21 PM IST

கடலூர் : திமுகவில் இணைய உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன்

முன்னாள் எம்எல்ஏ ஐயப்பனுக்கும் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால், முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் அவரது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐயப்பன் வீட்டில் வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன்

இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், 'இந்த சோதனையின் மூலம் இலவசமாக என்னுடைய பெயர், படம், செய்தி நாளை வரை சமூக வலைதளங்களில் வைரலாகும். இந்த பொய்யான தகவலை அளித்த நண்பருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நான் உண்மையாக உழைக்கிறவன், எங்கிருந்தாலும் மற்றவர்களை உயர்த்த வேண்டும் என நினைக்கிறேன். யாருக்கும் துரோகம் இழைத்ததில்லை.

ஆனால் எனக்கு துரோகம் இழைக்கும் எண்ணத்தில் யாரோ கயவர்கள் பொய் புகார் அளித்து இந்த சோதனைக்கு உட்படுத்தி இருக்கின்றனர். என்னுடைய செல்வாக்கைக் குறைப்பதற்கான அச்சுறுத்தல் தான் இந்த சோதனை. இந்த சோதனை அமைச்சர் தூண்டுதல் அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் மூலமாக இருக்கலாம்' என அவர் கூறினார்.

திமுகவில் இணைய உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

கடலூர்
ஏப்ரல் 9,
திமுகவில் இணைய உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவராக முன்னாள் எம்எல்ஏ ஐயப்பனுக்கும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் தொழில் துறை அமைச்சருமான எம் சி சம்பத்துக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

வருகிற 11-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டி ஆர் வி எஸ் ரமேஷ் ஆதரித்து வடலூர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார் இந்நிலையில் ஐயப்பன் தலைமையில் அவரது ஆதரவாளர்களுடன் திமுக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் வீட்டில் வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

சோதனைக்கு பின்னர் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; இந்த சோதனையின் மூலம் இலவசமாக என்னுடைய பெயர் படம் செய்தி நாளை வரை வெளியிடப் போகிறார்கள் இந்த பொய்யான தகவலை அளித்த நண்பருக்கு என்னுடைய நன்றி தெரிவித்தார். நான் உண்மையாக உழைக்கிறவன் நான் எங்கிருந்தாலும் மற்றவர்களை உயர்த்தணும் என்று நினைக்கிறேன் முடிந்த அளவு நன்மை செய்யக் கூடியவன் யாருக்கும் துரோகம் இழைத்ததில்லை எனக்கு துரோகம் இழைக்கும் என்ற எண்ணத்தில் யாரோ கயவர்கள் பொருள் புகார் அளித்து இந்த சோதனைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தத் தொகுதியின் அமைச்சர் எம் சி சம்பத்தின் செயல்பாடு சரியில்லை என்பதன் காரணத்தினால் என்னுடைய நண்பர்களோடு எங்களுடைய ஆதரவாளர்களோடு நம்முடைய அடுத்த முயற்சி என்ன செய்யலாம் என்று கலந்து ஆலோசித்து இருந்த இந்த நேரத்தில் என்னுடைய கூட்டத்தை குறைப்பதற்கு என்னுடைய செல்வாக்கை குறைப்பதற்கும் ஆதரவாளர்களை குறைப்பதற்கும் இந்த மாதிரி பொய்யான தகவலை அளித்து இந்த மாதிரியான சோதனை உட்படுத்துகிறார்கள் சோதனைக்கு பின்னர் அதிகாரிகள் ஒன்றுமில்லை என்று சொல்லி முடித்து விட்டு சந்தோஷமாக செல்கிறார்கள் என தெரிவித்தார்.

என்னுடைய கூட்டத்தில் குறைப்பதற்கும் செல்வாக்கைக் குறைப்பதற்குமான அச்சுறுத்தல் தான் இந்த சோதனை என்றார்.
இந்த சோதனை கட்சியை விட்டு செல்வதால் அமைச்சர் தூண்டுதலின் பேரில் நடத்திருக்கலாமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு
*இந்த சோதனை அமைச்சர் தூண்டுதல் அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் மூலமாக இருக்கலாம் தனிப்பட்ட முறையில் வேறு எதுவும் இல்லை* என்றார்

மேலும் அதிமுக கட்சியை விட்டு விலகுவதற்கு இப்பகுதியைச் சேர்ந்த கடலூர் மாவட்ட செயலாளரும் தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத்தின் செயல்பாடுகள் பிடிக்காமல் குடும்ப அரசியல் கொள்கை இல்லாத அரசியல் மற்றவர்களை மதிக்க கூடிய அரசியல் செய்ய தெரியாமல் இருக்கும் மாண்புமிகு எம் சி சம்பத்தை எதிர்த்து தான் என பேட்டி அளித்தார்.

*Video send mojo*

ABOUT THE AUTHOR

...view details