தமிழ்நாடு

tamil nadu

தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு இருவிரல் சோதனை? நைசாக நழுவிய டிஜிபி!

By

Published : May 29, 2023, 7:16 PM IST

தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு இருவிரல் சோதனை நடைபெற்றதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு சுகாதாரத்துறையின் பதிலையே டிஜிபி சைலேந்திர பாபு சுட்டிக்காட்டியுள்ளார்.

டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வருகை தந்தார். அங்கு வந்த அவருக்கு கடலூர் எஸ்.பி இராஜாராம் உள்ளிட்ட காவலர்கள் பலர் வரவேற்ப்பளித்தனர்.

தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 130 சவரன் தங்க நகை மற்றும் 25 செல்போன்கள் , வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நிகழ்ச்சியை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தமிழக காவல்துறை குற்ற வழக்குகளை கையாளுவதிலும், குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என புகழாரம் சூட்டினார்.

மேலும், கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முத்தாண்டிக்குப்பத்தில் ஆதாய கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மற்றும் அதே காவல் நிலையத்தில் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து 48 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது பாராட்டுக்குரியதாகும் என குறிப்பிட்டார். இதற்காக போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த அவர் சான்றிதழையும் வழங்கினார்.

தொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபுவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருவிரல் பரிசோதனை நடைபெற்றதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இது குறித்து சுகாதாரத்துறை எந்த தகவலை முன்வைத்திருக்கிறதோ அதுவே சரி, எனக்கூறினார்.

அதனை தொடர்ந்து காவலர்கள் பணி நியமனம், சைபர் கிரைம் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த சைலேந்திர பாபு, தமிழ்நாடு காவல்துறையில் தற்போது அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் எனவும், காலி பணியிடங்கள் இல்லாத நிலை இந்த ஆண்டு உருவாகி உள்ளது எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 16 சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றத்தில் எதிர்பாராத குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருவதாக கூறிய சைலேந்திரபாபு, இதில் அரசு ஊழியர்கள், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், தொழிலதிபர்கள், வேலை தேடி அலையும் இளைஞர்கள், உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் பண மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் கவனமுடம் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும் சைபர் கிரைம் குறித்து போலீசார் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் 37 மாவட்டங்களில் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மற்றும் குற்றப்பிரிவு மையங்கள் ஏடிஜிபி தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் வெளிநாடுகளில் ஏமாற்றப்படும் பணங்கள் உடனடியாக பறிமுதல் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சைலேந்திர பாபு விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: குப்பைத் தொட்டியில் உணவு தேடும் பாகுபலி யானை: வனத்துறையின் நடவடிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details