தமிழ்நாடு

tamil nadu

'திமுக கோட்டையான விக்கிரவாண்டியிலேயே அதிமுக ஓட்டையை போட்டது' - வைகைச்செல்வன்

By

Published : Nov 15, 2019, 7:11 PM IST

கடலூர்: திமுகவின் கோட்டையாக விளங்கிய விக்கிரவாண்டியில் அதிமுக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஓட்டை போட்டது என்று அதிமுக கொள்கைபரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.

admk propaganda secretary kalaiselavan pressmeet

கடலூரில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், அதிமுக கொள்கைபரப்புச் செயலாளர் வைகைச்செல்வன், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வைகைச்செல்வன், ' திமுகவுக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பலத்த அடி கிடைத்தது. விக்கிரவாண்டியில் தாங்கள் பெரும் வெற்றி பெறுவோம் என்ற திமிரிலும் மமதையிலும் நாவடக்கம் இல்லாமல், முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் வாய்க்கு வந்தபடி ஸ்டாலின் பேசி வந்தார். பத்திரிகையாளர்கள் முகம் சுளிக்குமளவிற்கு முதிர்ச்சியற்ற பேச்சை அவர் உதிர்த்தார்.

விக்கிரவாண்டி திமுகவின் கோட்டை என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்தக் கோட்டையில் ஓட்டை விழுந்தபடி அதிமுக 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் ஏதேதோ ஸ்டாலின் பேசிக்கொண்டு வருகிறார்.

அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வனின் பேட்டி

தமிழ்நாடு அரசியல் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறுவது தவறான கருத்து. வெற்றிடத்தை நிரப்பும் தகுதி காற்றுக்கு உள்ளது. தகுதியுள்ளது தப்பி பிழைக்கும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை. அதற்கு உதாரணம் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆவர். அவர்கள் தகுதியுள்ளவர்கள் என்பதால்தான் அதிமுகவும் தப்பிப் பிழைத்துள்ளது' என்றார்.

இதையும் படிங்க:’ஆசிரியர்களின் கனவு நிறைவேறும் காலம் வெகுதொலைவில் இல்லை’ - அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்

Intro:உள்ளாட்சித் தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டதுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- கலைச்செல்வன்


Body:கடலூர்
நவம்பர் 15,

கடலூரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கலைச்செல்வன் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்கப்பட்டது .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கலைச்செல்வன் கூறியதாவது;தமிழ்நாடு முழுவதும் அதாவது நவம்பர் 15,16 இந்த இரண்டு நாட்களிலும் தலைமை கழகத்தினுடைய நிர்வாகிகள் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் பெருமக்களோடு இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். தலைமை கழகத்தில் சார்பிலே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் நானும் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத்தும் இன்று காலை 10 மணி முதல் உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்களை பெற்று வருகிறோம்.

விக்கிரவாண்டியில் பலத்த அடி கிடைத்தது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விக்கிரவாண்டியில் பெரும் வெற்றி பெறுவோம் என்ற திமிரில் நாவடக்கம் இல்லாமல் முதலமைச்சரையும் துணை முதல்வரையும் வாய்க்கு வந்தபடி பேசி வந்தார் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் பத்திரிகையாளர்கள் முகம் சுளித்தார்கள் முதிர்ச்சியற்ற தலைவராக மு க ஸ்டாலின் இருக்கிறார் என்று பொதுமக்கள் உட்பட இந்நேரத்தில் நடுநிலை பத்திரிக்கைகள் அனைத்தும் இந்த நாட்களில் விமர்சனம் செய்தார்கள் அப்படிப்பட்ட நேரத்தில் விக்கிரவாண்டி திமுகவின் கோட்டை என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த கோட்டையில் ஓட்டை விழுந்த படி அதிமுக 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சகித்துக் கொள்ள முடியாமல் ஏதேதோ பேசிக் கொண்டு வருகிறார் ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சித் தேர்தல் செயலாளர் மாற்றப்பட்டதற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் காவல்துறை கண்காணிப்பாளர்கள் என பல பேர் மாறியிருக்கிறார்கள் இது அரசின் அன்றாட நடவடிக்கை இது முதலமைச்சரின் விருப்பம்.

தமிழக அரசியல் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறுவது தவறான கருத்து வெற்றிடத்தை காற்று நிரப்பும் தகுதி உள்ளது தப்பி பிழைக்கும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை தமிழகத்தில் புரட்சித்தலைவி எம்ஜிஆருக்கு பின் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் நிரப்பி வந்தார்கள். அம்மாவுக்கு பின்பு வெற்றிடம் உள்ளதாக ஒரு மாயத்தோற்றத்தை மாய பிம்பத்தை உருவாக்க பார்த்தார்கள் ஆனால் அந்த மாய பிம்பத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெற்றிடத்தை காற்று நிரப்புவதுபோல் நிரப்பி விட்டார்கள். தகுதியுள்ளவர்கள் தப்பிப் பிழைப்பவர்கள் என்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய எழுச்சியை பெற்றிருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும் கூட வேலூரில் மிகக்குறுகிய சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வியை நழுவ விட்டோம் நாங்குனேரி விக்கிரவாண்டியில் காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழகம் வைத்திருந்த அந்த தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

கூட்டணி பற்றி எந்தவிதமான பிரச்சனையும் இல்லை விருப்பமனு இன்றும் நாளையும் நல்லபடியாக முடியும் தலைமை கழகத்தின் முடிவிலேயே கூட்டணி கட்சிகளுக்கு எந்தந்த மாநகராட்சி ஒதுக்கப்படும் என்பதே பரஸ்பரமாக முடிவு எடுக்கப்படும் இதை முதல்வரும் துணை முதல்வரும் விரைவில் அறிவிப்பார் எனக் கூறினார்.








Conclusion:

ABOUT THE AUTHOR

...view details