தமிழ்நாடு

tamil nadu

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றம்!

By

Published : Feb 4, 2021, 7:19 PM IST

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து தவறாக நடக்க முயன்ற இளைஞரை அவர் குடியிருந்த வாடகை வீட்டிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றியுள்ளனர்.

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர்
சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர்

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் ஈச்சனாரி விநாயகர் கோயில் பின்புறம் உள்ள பகுதியில் உள்ள ஒரு வீட்டில், இரு வயதானவர்களுடன், இளைஞர் ஒருவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நேற்று (பிப்.3) மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த, 7 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்த அந்த இளைஞர், சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

அவரிடமிருந்து தப்பித்துச் சென்ற சிறுமி தனது வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்களும் அண்டை வீட்டார்களும் குனியமுத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, இளைஞர் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். அப்போது அந்த இளைஞர் கதவை திறக்காமல் புறக்கணித்து வந்த நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில், சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், அவர் சத்தம் போட்டதால் பயந்து போய் விட்டு விட்டதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்யாமல் எச்சரிக்கை செய்து விட்டு சென்றனர்.

அதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த பெரியர்களிடம் நடந்ததைக் கூறிய அப்பகுதி மக்கள், வீட்டின் உரிமையாளரை வரவழைத்து, அவர்களை வீட்டை காலி செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதனால் வீட்டின் உரிமையாளர், வீட்டை காலி செய்யும் படி கூறிய நிலையில், மூவரும் வீட்டை காலி செய்தனர்.

இதையும் படிங்க:தனது சாவுக்கு காரணம் இவர்களே! - தற்கொலை செய்துகொண்ட தூய்மைப் பணியாளரின் காணொலி வைரல்!

ABOUT THE AUTHOR

...view details