தமிழ்நாடு

tamil nadu

வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கிய காட்டெருமை!

By

Published : Apr 3, 2021, 4:48 PM IST

கோயம்புத்தூர்: வால்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரை காட்டெருமை தாக்கியதில் வாகனஓட்டி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

buffalo
buffalo

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த சிறுகுன்றா பகுதியில் வசித்தவர் ரஷாக்குமார். இவர் நேற்று மாலை, தனது இருசக்கர வாகனத்தில் தனது இளையமகன் ஆகாஷுடன் வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது சிறுகுன்றா பகுதியில் காட்டெருமை ஓன்று எதிர்பாரத விதமாக ரஷாக்குமாரை தாக்கியது. இதில் அவரது தலை, கழுத்து, மார்பு பகுதி காயமடைந்தது. இதை பார்த்த ஆகாஷ் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ரஷாக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த வால்பாறை வனச்சரக ரேஞ்சர் மணிகண்டன், விஜயராகவன், ஷேக் உமர், கீர்த்தி குமார் ஆகியோர் ரஷாக்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details