தமிழ்நாடு

tamil nadu

அரசு ஊழியருக்கு வளைகாப்பு - தாய் ஸ்தானத்தில் இருந்த சக ஊழியர்கள்

By

Published : Mar 17, 2022, 7:29 AM IST

Updated : Mar 17, 2022, 11:33 AM IST

அன்னூரில் தாயை இழந்த வட்டார வளர்ச்சி பெண் இளநிலை உதவியாளருக்கு அலுவலக ஊழியர்களே தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியருக்கு வளைகாப்பு
அரசு ஊழியருக்கு வளைகாப்பு

கோயம்புத்தூர்:அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் குனவதி. ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை பூர்விகமாக கொண்ட இவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக அன்னூரில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குணவதி கருவுற்று நிறைமாத கர்ப்பினியான நிலையில் இவரது தாயை அண்மையில் இழந்தார்.

இதனால் இவருக்கு தாய் இல்லாமல் வளைகாப்பு நடக்குமா என மனச்சோர்வுடன் இருந்த நிலையில், அவரது மன வலியை போக்கும் வகையில் அவருடன் பணியாற்று சக ஊழியர்கள் ஒருங்கிணைந்து நேற்று (மார்ச் 16) அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளைகாப்பு நடத்தி அசத்தினர்.

அரசு ஊழியருக்கு வளைகாப்பு

அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குணவதிக்கு சக ஊழியர்கள் வளையல் போட்டு, பொட்டு, பூ வைத்து ஆர்த்தி எடுத்து தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்தினர். இதனால் மனம் மகிழ்ந்து ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிங்க:32 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறை பாதுகாப்பின்றி நண்பர்களுடன் தேநீர் அருந்திய பேரறிவாளன்

Last Updated : Mar 17, 2022, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details