தமிழ்நாடு

tamil nadu

கோவை கட்டட விபத்து: இருவர் கைது - நிவாரணம் வழங்க ஏற்பாடு

By

Published : Jul 6, 2023, 7:57 AM IST

கோவை தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், நேற்று இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தொழிலாளர்கள் உயிரிழப்பு சம்பவத்தில் இரண்டு பேர் கைது
தொழிலாளர்கள் உயிரிழப்பு சம்பவத்தில் இரண்டு பேர் கைது

தொழிலாளர்கள் உயிரிழப்பு சம்பவத்தில் இரண்டு பேர் கைது

கோயம்புத்தூர்:கோவை பாலக்காடு சாலை குனியமுத்தூர் பகுதியில் பிரபல தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுற்றுச்சுவர் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் ஐந்து புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இவ்வாறு சுற்றுச்சுவர் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த கொல்லி ஜெகநாதன், நக்கிலா சத்யம், ராப்பாக்க கண்ணையா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிஸ் கோஸ், பரூன் கோஸ் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சம்பவ இடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி மேயர், துணை மேயர், கோவை தெற்கு காவல் உதவி ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர், சைட் இன்ஜினியர் சாகுல் ஹமீது, கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன், மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், அருணாச்சலம் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்த விபத்துக்கு காரணம் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஆட்சியர் அறிவிப்பு

பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடைய கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், கோவை கல்லூரி விடுதியின் பின்புறம் சுற்றுசுவர் இடிந்து விழுந்து வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த ஐந்து பேரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று (ஜூலை 5) மாலை தொழிலாளர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு விமான நிலையம் கொண்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர், காப்பீடு நிறுவனம் மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் ஆகியவற்றின் வாயிலாக உரிய நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details