தமிழ்நாடு

tamil nadu

தனியார் சிமெண்ட் ஆலையை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

By

Published : Oct 21, 2020, 4:23 PM IST

கோயம்புத்தூர்: சிமெண்ட் ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேறுவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் சிமெண்ட் ஆலையை கண்டித்து போராட்டம்
தனியார் சிமெண்ட் ஆலையை கண்டித்து போராட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் சிமெண்ட் ஆலை செயல்பட்டுவருகிறது. இந்த சிமெண்ட் ஆலையில் இருந்து மாசு கலந்த புகை அதிகமாக வெளியேறுவதாக பல நாள்களாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால் மதுக்கரை, குரும்பபாளையம், மைல்கல் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போருக்கு சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குரும்பபாளையம் பகுதியினர் ஆலையை மூடக் கோரியும் ஆலைக் கழிவுகள் வெளியேறாமல் தடுக்கக் கோரியும் சிமெண்ட் ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் எவ்வித மாற்றமுமின்றி கழிவுகள் வெளியேறுவது வாடிக்கையாகிவருகிறது. இதைக் கண்டித்து மீண்டும் இன்று (அக்.,21) சிமெண்ட் ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் சிமெண்ட் ஆலையை கண்டித்து போராட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தின் பலனாக, ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேறுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுவரை ஆலையில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

இதையும் படிங்க:ஏசிசி சிமெண்ட் ஆலையை கண்டித்து பாஜக போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details