தமிழ்நாடு

tamil nadu

Coimbatore car blast case: சிறப்பு நீதிமன்றத்தில் மேலும் 5 பேர் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்

By

Published : Jun 2, 2023, 9:34 PM IST

கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக மேலும் 5 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

Coimbatore car blast case: கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு விவகாரத்தில் ஏற்கனவே ஆறு பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (ஜூன் 2) மேலும் கூடுதலாக, 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் இந்தியாவுக்கு எதிராகவும், பொது நிர்வாகத்தின் மீது போர் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூர் குற்றவாளிகள் எவ்வாறு தீவிரவாத தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தனர் மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் உள்ளிட்டவை விசாரணையில் அம்பலமானது. கோயம்புத்தூரில் அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு நடந்தது. விசாரணையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத கொள்கை உடைய ஜமிஷா முபின் என்ற தீவிரவாதி தற்கொலை தாக்குதல் நடத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக என் ஐ ஏ கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விசாரணையை கையில் எடுத்து வழக்கில் தொடர்புடைய 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே ஆறு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஐந்து பேர் மீது குற்ற பத்திரிக்கை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் ஜமீசா முபின் மற்றும் முகமது அசாருதீன் உமர் பாரூக், இதயத்துல்லா மற்றும் சனோஃபர் அலி ஆகியோரிடம் சேர்ந்து கோயம்புத்தூரில் தற்கொலை படை தாக்குதலை நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் என்பது கபீர்ஸ் எனப்படும் தங்கள் கொள்கை மீது நம்பிக்கை இல்லாத நபர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் எனவும், தாக்குதலுக்கு முன்பாக வீடியோவையும் தீவிரவாதிகள் வெளியிட்டு இருந்தனர்.

விசாரணையில் அசாருதீன் மற்றும் அப்சார் ஆகிய இருவரும் ஜமிசா முபீனுக்கு வெடிபொருட்கள் கொடுத்து உதவியதும், முகமது தல்ஹா குற்றத்திற்கு கார் கொடுத்து உதவியதும் தெரிய வந்தது. மேலும் ஃபெரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர் வெடிபொருட்கள் வெடிக்க வைப்பதற்காக ஜமிஸாவிற்கு உதவியதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, டிரம்ஸ் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை காரில் ஏற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தாக்குதல் திட்டம் என்பது சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் உமர் ஃபரூக் என்பவரை தலைமையாக தேர்ந்தெடுத்து தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. உமர் ஃபரூக் பலருக்கும் இந்த தாக்குதல் தொடர்பான பல்வேறு வேலைகளை செய்ய திட்டமிட்டு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து வெடிபொருட்களை வைத்து பல்வேறு தீவிரவாத தாக்குதலை நடத்தவும் திட்டமிட்டதும் அம்பலமானது. முகமது தவ்பிக் என்பவனிடம் பல்வேறு சட்ட விரோத புத்தகங்களும், வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான குறிப்புகள், டிசைன்கள் ஆகியவற்றை வைத்திருந்ததும் தெரியவந்தது.

உமர் ஃபரூக் மற்றும் ஜமிஷா முபின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதும் மேலும், சனோபர் அலி ஜமீசா முபினுக்கு பொருளாதார ரீதியாக உதவி புரிந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் பெரோஸ் கான் தீவிரவாத தாக்குதலுக்கு தேவையான பல்வேறு போக்குவரத்து உதவிகளை உதவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தீவிரவாத கும்பலின் மிகப்பெரிய திட்டம் இந்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக பொது நிர்வாகம் காவல்துறை, நீதித்துறை உள்ளிட்டவற்றில் குறி வைத்து போர் நடத்த திட்டமிட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையும் படிங்க:கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருந்தவருக்கு 3 மாதம் விடுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details