தமிழ்நாடு

tamil nadu

கோவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்திய இருசக்கர வாகனப் பேரணி!

By

Published : Jan 26, 2022, 6:18 PM IST

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், காவல் துறையினரின் அனுமதியை மீறி இருசக்கர வாகனப் பேரணி இன்று (ஜன.26) நடத்தப்பட்டது.

கோவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் இருசக்கர வாகன பேரணி!
கோவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் இருசக்கர வாகன பேரணி!

கோவை:கோவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து காவல் துறையினரின் அனுமதியை மீறி இரு சக்கர வாகனப் பேரணியை இன்று (ஜன. 26) மேற்கொண்டனர்.

பவர் ஹவுஸ் முதல் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம்வரை பேரணியானது நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அவர்களின் சங்கங்களின் கொடியினை வாகனங்களில் கட்டியவாறு பேரணியை மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு தேசியக்கொடியேற்றி பிப்ரவரி 23, 24ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தக்கோரிக்கைகளை முன்மொழிந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் நான்கையும் கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு, பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்தல் உள்ளிட்டவறை வலியுறுத்தினர்.

அத்துடன் வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்குதல், ஒப்பந்தத் தொழிலாளிகளை நிரந்தரமாக்குதல், சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி உறுதிமொழி ஏற்றனர்.

பேரணியில் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காத ஆர்பிஐ ஊழியர்கள் - காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details