தமிழ்நாடு

tamil nadu

'கோயில்கள் பொக்கிஷங்களாக உள்ளன, அவற்றை பாதுகாக்க வேண்டும்' - அமைச்சர் சேகர்பாபு

By

Published : Jan 28, 2023, 6:35 AM IST

கோயில்களில் எந்த காலத்திலும் உருவாக்க முடியாத பொக்கிஷங்களாக உள்ளன. அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு

கோயம்புத்தூர்:பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதன்பின் சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பழனியில் மேலே 6,000 பேர் மட்டுமே அமரும் வகையில் இடவசதி உள்ளது. மொத்தம் 52ஆயிரம் பேர் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். 33 அக்னி குண்டம் அமைக்கப்பட்டது, 13 மேல் மண்டபம் அனைத்து பிரகாரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர் 447 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. தமிழில் 108 ஓதுவார்கள் வைத்து வேத மந்திரம், திருமுறை, கந்த சஷ்டி கவசம் ஆகியவை இடம் பெற்று இருந்தது. தமிழில் குடமுழுக்கு நடத்த நீதி மன்றம் ஒரு குழு அமைக்க அறிவுறுத்தியது, அதன்படி குழு அமைக்கப்பட்டு அவர்கள் அது சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சியில் 282 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. 62 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சிலைகள் சென்னையில் தொழிலதிபர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் மீண்டும் அந்தந்த கோயில்களுக்கு சிலைகள் ஒப்படைக்கப்படும். கோயிலுக்குச் சொந்தமான 3.54 லட்சம் ஏக்கர் நிலங்களை அளவிடும் பனி தொடங்கினோம்” என்றார்.

கோயில்களில் உள்ள யானைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தமிழ்நாட்டு கோயில்களில் 29 யானைகள் உள்ளன. அதில் 26 கோயில்களில் குளியல் தொட்டி, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகளுக்காக நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே யானைகள் புத்துணர்வு முகாம் தேவையற்ற ஒன்றாகிவிட்டது” என்றார்.

தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இந்து சமய அறநிலையத்துறை மீதான குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, “கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் கட்டுப்பாடுடன் இருக்கும். கோயில்களில் எந்த காலத்திலும் உருவாக்க முடியாத பொக்கிஷங்கள் உள்ளன. அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் முடியும்.

நாட்டில் ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் அரசியலில் ஏதாவது ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் ஏதாவது இந்துக்கள் அவர்கள் பக்கம் திரும்புவார்களா என்று எதிர்பார்க்கின்றனர். இந்த ஆட்சியை பொருத்தவரையில் தடுமாறாத ஒரு இரும்பு மனிதர் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:Palani Thaipusam:பழனி தைப்பூசம் திருவிழாவிற்கு கோவை, திண்டுக்கல் சிறப்பு ரயில் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details