தமிழ்நாடு

tamil nadu

வேளாண் தனி நிதிநிலை அறிக்கை கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்!

By

Published : Jul 28, 2021, 2:50 PM IST

2021- 2022 ஆண்டின் வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

Minister attending the consultation meeting about agri financing
வேளாண் தனிநிதி நிலை அறிக்கை- கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்!

கோவை:வேளாண் பல்கலைக் கழக கலையரங்கில் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பிற்கான கருத்துக்கேட்பு கூட்டம் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். அதற்கு முன்னதாக அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்

அப்போது, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வேளாண் துறை செயலாளர், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நெருக்கடியை கொடுத்த பத்திரப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details