தமிழ்நாடு

tamil nadu

'சாம்பாரில் பல்லி, ஊத்திட்டாங்க அள்ளி'- வாடிக்கையாளர் அதிர்ச்சி!

By

Published : Jan 12, 2022, 12:07 PM IST

சித்தாபுதூரில் உள்ள உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லியிருந்த சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாம்பாரில் பல்லி உயிரிழந்து கிடந்தது தொடர்பான காணொலி
சாம்பாரில் பல்லி உயிரிழந்து கிடந்தது தொடர்பான காணொலிசாம்பாரில் பல்லி உயிரிழந்து கிடந்தது தொடர்பான காணொலி

கோவை: சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் "இட்லி விருந்து" எனும் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கு நேற்றிரவு (ஜன.11) தனது நண்பர்களுடன் வந்த ஏழுமலை என்பவர் இட்லியை பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குச் சென்று பார்சலை பிரித்து பார்த்தபோது சாம்பாரில் பல்லி உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அந்தப் பார்சலை சம்பந்தப்பட்ட கடைக்கு எடுத்துச்சென்ற ஏழுமலை, உணவக ஊழியர்களிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ளார். அப்போது உணவக உரிமையாளர் இல்லாததால், மீண்டும் காலை வந்து பார்க்குமாறு உணவக ஊழியர்கள் மெத்தனமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

சாம்பாரில் பல்லி உயிரிழந்து கிடந்தது தொடர்பான காணொலி

இதனையடுத்து உணவு பார்சலில் பல்லி இருப்பதை தனது செல்போனில் காணொலியாக பதிவு செய்த ஏழுமலை, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் வைரலானதையடுத்து, காணொலியை ஆதாரமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் புகாரளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா? - உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கலான புதிய மனு!

ABOUT THE AUTHOR

...view details