தமிழ்நாடு

tamil nadu

அப்துல் கலாம் கனவு கண்டது போல இந்தியா வல்லரசாக மாறும் எல் முருகன்

By

Published : Aug 13, 2022, 12:50 PM IST

சர்வதேச அரங்கில் வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது 2047 ஆம் ஆண்டில் அப்துல் கலாம் கனவு கண்டதைப் போல இந்தியா வல்லரசு நாடாக மாறும் என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்

அப்துல் கலாம் கனவு கண்டது போல 2047ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும் எல் முருகன்
அப்துல் கலாம் கனவு கண்டது போல 2047ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும் எல் முருகன்

கோவை: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுவாமி விவேகானந்தா கேந்திரா சார்பில் சுதந்திர ஓட்டம் நிகழ்வு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது.
ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிகழ்வில் தேசியக் கொடியை அனைவரும் கையில் தூக்கிப் பிடித்தபடி அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் ம எல். முருகன் கொடியை அசைத்து சுதந்திர ஓட்டத்தைத் துவங்கி வைத்தார். இந்த சுதந்திர ஒட்டம் கல்லூரியில் இருந்து முக்கிய சாலைகளின் வழியாக 7.2 கி.மீ தூரம் சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், சுதந்திர தினத்தை முன்னிட்டு 75வது சுதந்திர அமுத பெருவிழா கொண்டாட்டமாக தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சிறப்பாக 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர்.

பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 10 நாட்களாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. இன்று கோவையில் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரா சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கொள்ளும் விதமாகவும், நமது தேசியக் கொடியின் பெருமையை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்லும் விதமாகவும், இந்த மாரத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பொது மக்கள் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

மலை கிராமங்களில் உள்ள மக்களும் தாமாக முன்வந்து இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். தமிழ்நாடு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். தமிழ்நாடு பல சுதந்திர போராட்ட வீரர்களை தந்த மாநிலம். வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், பாரதியார் போன்ற பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளனர். குறிப்பாக கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம்.

இவர்களை தவிர அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களும் உள்ளனர். அதில் சுப்பிரமணிய பாரதியும் ஒருவர் என தெரிவித்தார். விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தேசபக்தி உள்ள அனைவரும் அவர்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். சர்வதேச அரங்கில் வளர்ந்து வரும் நாடாக இந்தியா செயல்பட்டு வருகிறது. 2047ஆம் ஆண்டில் அப்துல் கலாம் கனவு கண்டதைப் போல இந்தியா வல்லரசு நாடாக மாறும்' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்: கோவை மண்ணின் விடுதலைப் போராட்ட தடங்கள்

ABOUT THE AUTHOR

...view details