தமிழ்நாடு

tamil nadu

'தமிழ்நாடு வாழ்க' கோவை மக்கள் நீதி மய்யம் போஸ்டர்!

By

Published : Jan 9, 2023, 11:44 AM IST

கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பாரதியார் வேடத்தில் கமல்ஹாசனும், ‘தமிழ்நாடு வாழ்க’ என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாரதியார் வேடத்தில் ஆண்டவர்.. கோவை போஸ்டரால் சர்ச்சை!
பாரதியார் வேடத்தில் ஆண்டவர்.. கோவை போஸ்டரால் சர்ச்சை!

கோயம்புத்தூர்:சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு - தமிழகம் தொடர்பாக பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் கோவை மாநகரில் உள்ள லங்கா கார்னர் பகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் கோவை மத்திய மாவட்டம் சார்பில் "தமிழ்நாடு வாழ்க" என்ற வார்த்தையுடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் அதில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், பாரதியார் வேடம் அணிந்த புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. தற்போது வரை தமிழ்நாடு குறித்த ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் ‘தமிழ்நாடு’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:TN Assembly: தமிழில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி.. ஆளுநருக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!

ABOUT THE AUTHOR

...view details