தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : அதிமுக மாநில நிர்வாகி சஜீவனிடம் 7 மணி நேரம் விசாரணை.. அடுத்து யார் ?

By

Published : Apr 27, 2022, 8:02 AM IST

கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் குறித்து அதிமுக மாநில வர்த்தக அணி பொறுப்பாளர் சஜீவனிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

kodanad-murder-and-robbery-incident-police-investigated-7-hours-with-sajeevan கோடநாடு கொலை கொள்ளை  வழக்கு : அதிமுக மாநில நிர்வாகி சஜீவனிடம் 7 மணி நேரம் விசாரணை.. அடுத்து யார் ?
kodanad-murder-and-robbery-incident-police-investigated-7-hours-with-sajeevan கோடநாடு கொலை கொள்ளை வழக்கு : அதிமுக மாநில நிர்வாகி சஜீவனிடம் 7 மணி நேரம் விசாரணை.. அடுத்து யார் ?

கோயம்புத்தூர்:நீலகிரிமாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புகுந்த கும்பல் ஒன்று காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு, பல்வேறு முக்கியப்பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கோத்தகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மனோஜ், சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் காவல் துறையினர் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ஆம் ஆண்டு சேலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அதிமுக மாநில வர்த்தக அணி பொறுப்பாளராக இருக்கும் சஜீவன்

மேலும் கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டது போன்றவை அடுத்தடுத்து பல சந்தேகங்களை கிளப்பியது. இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்த பின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மீண்டும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தூசிதட்டப்பட்டு மறு விசாரணை தொடங்கியது.

கோடநாடு

அதன் படி, மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, சசிகலாவிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து ஐஜி சுதாகர் விசாரணை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, நேற்று (ஏப்.27) அதிமுக வை சேர்ந்த சஜீவன்-யிடம் கோவை காவலர் பயிற்சி மையத்தில் தனிப்படை காவல்துறையினரால் விசாரணை நடத்தினர்.

சஜீவன்

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில், டிஐஜி முத்துசாமி மேற்பார்வையில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விசாரணை முடிந்து வந்த சஜீவன் செய்தியாளர்களிடம் விசாரணை பற்றி தெரிவிக்க மறுத்து விட்டார். சஜீவன் அதிமுக மாநில வர்த்தக அணி பொறுப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோடநாடு கொலை : சசிகலாவிடம் 100 கேள்விகள்...!

ABOUT THE AUTHOR

...view details