தமிழ்நாடு

tamil nadu

கோவையில் இடியுடன் கூடிய கனமழை

By

Published : Sep 3, 2020, 12:25 PM IST

கோவையில் நேற்று (செப்.02) இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவையில் இடியுடன் கூடிய கனமழை
கோவையில் இடியுடன் கூடிய கனமழை

வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் (செப்.01) கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதேபோல நேற்று (செப்.02) பிற்பகலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், கோவை வடக்கு, காந்திபுரம், சிவானந்தா காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

அதுபோல கோவை மாவட்டத்தில் வெளி பகுதிகளான கருமத்தம்பட்டி, அன்னூர், சூலூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்ததோடு, விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் வேளாண்மைப் பணிகளைத் தொடங்கியும் உள்ளனர்.

இதையும் படிங்க:சத்தியமங்கலத்தில் கன மழை: விவசாயிகள் மகிழச்சி!

ABOUT THE AUTHOR

...view details