தமிழ்நாடு

tamil nadu

ஈமு கோழி மோசடி வழக்கு: மூன்று பேர் கைது!

By

Published : Sep 7, 2020, 4:21 PM IST

கோவை : ஈமு கோழி மோசடி வழக்கில் மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கைதானோர்
கைதானோர்

2014ஆம் ஆண்டு கிணத்துக்கடவு பகுதியில் ஜே.பி.ஆர்., ஈமு அக்ரி பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று உள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குனர்களான பத்மநாபன், ராஜ சேகர், ஜெயகுமார் ஆகிய மூன்று பேரும் 78 முதலீட்டாளர்களிடம், சுமார் 1.5 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழி குஞ்சுகள், அதற்கான கொட்டகை, மாத பராமரிப்புத் தொகையாக ரூ.6500 ஆண்டிற்கு 15,000 போனஸ் என்று கூறி விளம்பரம் செய்து மோசடி செய்துவந்தனர்.

மேலும் அவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில், கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கானது ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வந்த நிலையில் மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 56 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:கிசான் நிதி திட்டத்தில் பல கோடி ஊழல்: 14,000 வங்கிக் கணக்குகள் முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details