தமிழ்நாடு

tamil nadu

கோவை அருகே கருவுற்றிருந்த தாய் யானை இறந்த நிலையில் கண்டுபிடிப்பு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 10:53 PM IST

Elephant carrying baby died: கோவையில் அடுத்த நரசிபுரம் வனப் பகுதியில் 22 மாத குட்டியை கருவுற்றிருந்த தாய் யானை உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

கோவை அருகே கருவுற்றிருந்த தாய் யானை மரணம்
கோவை அருகே கருவுற்றிருந்த தாய் யானை மரணம்

கோயம்புத்தூர்:போளுவாம்பட்டி வனத்துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.18) நரசிபுரம் வனப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வைதேகி நீர்வீழ்ச்சி அருகே உள்ள கழுதை சாலை என்னும் பகுதியில் ஈடுபட்ட ரோந்து பணியின் போது பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தை அடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் மாலை நேரம் ஆகிவிட்டதாலும், மற்ற யானைகளின் நடமாட்டம் அப்பகுதிகளில் இருப்பதாலும், சோதனை பணியை நாளை தொடருவதாக முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து யானையின் உடல் இன்று (செப்.18) அன்று உடற்கூறாய்வு செய்ய முடிவு செய்யப்பட இருந்ததை அடுத்து, கோவை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார், வனச்சரகர் சுசீந்திரன் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு, உயிரிழந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனர்.

இதையும் படிங்க: விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவர்கள் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு!

அப்போது உயிரிழந்த யானையின் வயிற்றில், சுமார் 20 மாதங்களான ஆண் யானை குட்டி இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வைதேகி நீர்வீழ்ச்சி பகுதியில் உயிரிழந்த நிலையில் இருந்த யானைக்கு சுமார் 20 முதல் 22 வயது இருக்கும் என்று தெரிபவித்தனர்.

கருவுற்றிருந்த யானை பிரசவ காலத்திற்காக நீரோடை அருகே வரும்போது பிரசவிக்க முடியாமல் உயிரிழந்தது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த யானை இறந்து இரண்டு நாட்கள் கடந்து விட்டதை அடுத்து, அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: முறுக்கு விற்கும் பெண்ணின் ஏழ்மையை போக்க வீடு கட்டி கொடுத்த மாவட்ட ஆட்சியர்; பொதுமக்கள் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details