தமிழ்நாடு

tamil nadu

வெறி நாய் கடித்து 30 பேர் படுகாயம்

By

Published : Apr 19, 2019, 1:31 PM IST

சேலம்: கிச்சிப்பாளையம் பகுதியில் வெறிநாய் ஒன்று கடித்ததில் சைக்கிளில் சென்றவர்கள் பாதசாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

வெறி நாய் கடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் இன்று காலை வெறிநாய் ஒன்று அப்பகுதியில் வந்து வயதானவர்கள், சைக்கிளில் சென்றவர்கள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களை வெறித்தனமாக கடித்து குதறியது.

வெறி நாய் கடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

காயமடைந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனையில் வந்தனர். இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் மருத்துவமனை வாசலில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

வெறிநாய் கடிக்கு உரிய மருந்து இருப்பு இல்லை என கூறியும் நாய் கடி பட்ட நபர்களை காத்திருக்கும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியதால் பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரமாக காத்து கிடந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் நாய் கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் கூறினார்கள்.

Intro:வெறி நாய் கடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.


Body:சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து இல்லாமல் பொதுமக்கள் காத்து கிடந்த அவலம்.

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் இன்று காலை வெறிநாய் ஒன்று அப்பகுதியை வந்து வயதானவர்கள் சைக்கிளில் சென்றவர்கள் பாதசாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வரை வெறித்தனமாக கடித்து குதறியது.

காயமடைந்த வயதானோர் மற்றும் பொதுமக்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனையில் வந்தனர் இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் மருத்துவமனை வாசலில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

வெறிநாய் கடிக்கு உரிய மருந்து இருப்பு இல்லை என கூறியும் நாய் கடி பட்ட நபர்களை காத்திருக்கும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியதால் பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரமாக காத்து கிடந்தனர்.

மருத்துவமனையில் அலட்சியப்போக்கால் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை எடுத்துக்கொண்ட பொதுமக்கள் ஒரே வெறிநாய் 30க்கும் மேற்பட்ட நபர்களை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் சேலம் மாவட்டத்தில் நாய் கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.


Conclusion:காலை 8 மணிக்கு நாங்கள் நாய்கடிக்கு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து உரிய சிகிச்சை அளிக்காமல் மருந்து இல்லை பவரான மருந்து இல்லை என கூறி எங்களை சுமார் இரண்டு மணி நேரமாக காக்க வைத்தனர் என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details