தமிழ்நாடு

tamil nadu

மின் கட்டண உயர்வு: கோவையில் சிம்னி விளக்கு ஏந்தி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 29, 2022, 10:47 PM IST

கோயம்புத்தூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் சிம்னி விளக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாதந்தோறும் மின் கட்டண செலுத்தும் முறையை அமல்படுத்த கோரியும் உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது இப்ராகிம் தலைமையில் சிம்னி விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைகளில் சிம்னி விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மின் கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:போஸ்டர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை 10 நாட்களுக்குள் அகற்ற கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details