தமிழ்நாடு

tamil nadu

பாஜக பந்த் அன்று வணிக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

By

Published : Oct 29, 2022, 8:25 AM IST

பாஜக பந்த் அன்று வணிக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharatபாஜக பந்த் அன்று வணிக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை
Etv Bharatபாஜக பந்த் அன்று வணிக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

கோயம்புத்தூர் மாநகரில் கார் சிலிண்டர் வெடி விபத்து சம்பவத்தை தொடர்ந்து வரும் 31ஆம் தேதி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று(அக்.28) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர், கடையடைப்பில் கலந்து கொள்ளாமல் கடைகளை திறந்து வைத்திருக்கும் கடைகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அவ்வமைப்பினர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் கடையடைப்பு வணிகர்களயும், பொதுமக்களையும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், பொது பந்த் தேவைப்படும் பொழுது முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தற்போது அறிவித்துள்ள பந்த்தை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பந்தில் வணிகர் சங்கங்கள் கலந்து கொள்வதில்லை. ஆகவே அந்த நேரத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிபிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பாஜக பந்த் வழக்கு; போராட்டம் நடந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம்..!

ABOUT THE AUTHOR

...view details