தமிழ்நாடு

tamil nadu

கோவையில் மத்திய அரசு சார்பில் 103 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

By

Published : Oct 22, 2022, 10:13 PM IST

கோவையில் 103 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்

இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கும் வேலைவாய்ப்பு நிகழ்வை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி இந்தியா முழுவதும் சுமார் 115 நகரங்களில் நடைபெற்றது.

இதில் முதற்கட்டமாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.

இதில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி தபால்துறை போஸ்மாஸ்டர் ஜெனரல் ஸ்மிதா அயோத்யா, தமிழக சர்கிள் முதன்மை போஸ்ட் மாஸ்டர் செல்வகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், பல்வேறு வங்கிகள் மற்றும் மத்திய அரசுத் துறைகளில் பணிக்கு சேர்ந்த 103 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

இதையும் படிங்க:தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல பேருந்தை வழிமறிக்கும் மாணவர்கள்..!

ABOUT THE AUTHOR

...view details