தமிழ்நாடு

tamil nadu

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி கைது!!

By

Published : Jun 14, 2023, 6:55 PM IST

கோவையில் கடந்த 2021-ஆம் 12 மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி அர்ச்சனா கைது செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

கோவை: உக்கடம் பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, கடந்த 2021இல் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது அறையில் இருந்து கைப்பற்ற கடிதம் ஒன்றில், தற்கொலைக்கான காரணம் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், முன்னாள் படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், மிதுனின் மனைவி அர்ச்சனா ஆகியோரிடமும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த விவகாரத்தை வெளியில் கூறக்கூடாது என மாணவியை இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் மிதுன் சக்ரவர்த்தியை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை சயனைடு விவகாரத்தில் திருப்பம்.. மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம் என்ன?

மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனையும் போலீசார் கைது செய்தனர். கடிதத்தின் உண்மை தன்மையை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உறுதியானது. இந்நிலையில் சிறுமிக்கு சிறு வயதில் பாலியல் தொல்லையளித்த மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகிய இரண்டு பேரை கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பள்ளி மாணவி மிதுன் சக்ரவர்த்தியால் பாலியல் துன்புறுத்தல் செய்யபட்டது தெரிந்தும் காவல் துறையிடம் தெரிவிக்காததால் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்த மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கோவையில் நாய், பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு!

ஏற்கனவே சிறுமியும், அர்ச்சனாவுடன் செல்போனில் பேசிய ஆடியோவை போலீசார் சேகரித்திருந்தனர். கோவை மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஆசிரியரின் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவி உயிரிழந்த போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட பல்வேறு ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினர் வருகை புரிந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Coimbatore: கேஸ் கசிவால் தீ விபத்து! வட மாநிலத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details