தமிழ்நாடு

tamil nadu

தங்க மகன் நீரஜ் சோப்ராவை தங்கத்தால் வடித்த சிற்பி!

By

Published : Aug 12, 2021, 11:00 AM IST

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் பாரட்டும்விதமாக அவரை, 100 மி.கி. தங்கத்தில் கோவையைச் சேர்ந்த நபர் சிற்பமாக வடித்துள்ளார்.

தங்க மகன் நீரஜ் சோப்ராவை தங்கத்தால் வடித்த சிற்பி!
தங்க மகன் நீரஜ் சோப்ராவை தங்கத்தால் வடித்த சிற்பி!

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் ஈட்டி எறியும் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா 87.58 மீ தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. அவருக்கு அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

தங்க மகன் நீரஜ் சோப்ராவை தங்கத்தால் வடித்த சிற்பி!

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 6 கோடி பரிசுத் தொகை

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரியான யூ.எம்.டி. ராஜா என்பவர் நீரஜ் சோப்ராவைப் பாராட்டும்வகையில் 100 மி.கி. தங்கத்தில் அவர் ஈட்டி எறிவது போன்ற தங்கச் சிற்பத்தை வடித்துள்ளார்.

தங்க மகன் நீரஜ் சோப்ராவை தங்கத்தால் வடித்த சிற்பி!

ஒலிம்பிக் சின்னத்தின் மீது நின்று ஈட்டி எறிவது போன்ற சிற்பம், இந்திய வரைபட வடிவத்தின் உச்சியிலிருந்து ஈட்டி எறிவது போன்ற சிற்பம் எனச் செதுக்கியுள்ளார். ஏற்கெனவே யூ.எம்.டி. ராஜா பல்வேறு தங்கச் சிற்பங்கள், மணல் சிற்பங்களை வடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்க மகன் நீரஜ் சோப்ராவை தங்கத்தால் வடித்த சிற்பி!

இதையும் படிங்க: தங்க மகன் நீரஜுக்கு தங்கத்தில் சிலை - அசத்தும் தொழிலாளி

ABOUT THE AUTHOR

...view details