தமிழ்நாடு

tamil nadu

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை..!

By

Published : Mar 4, 2020, 4:49 PM IST

கோயம்புத்தூர்: ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் 60 சவரன் தங்க நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் நகை திருட்டு கோயம்புத்தூர் ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு ஒய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் முகமுடி கொள்ளையர்கள் கைவரிசை..! Jewel Theft In Coimbatore Coimbatore Jewel Theft In Teacher House Retried Teacher House Jewel Theft In coimbatore
Coimbatore Jewel Theft In Teacher House

கோயம்புத்தூர் மாவட்டம் சுங்கம் பாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்ஸ் ரொசாரியோ (60). இவரது மனைவி எலிசபெத் மேரி. இவர் ஒய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன், மகள் வெளிநாட்டில் வசித்துவருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை நான்கு பேர் கொண்ட முகமூடி கும்பல் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

பின்னர் தரைதளத்தில் உறங்கிக் கொண்டிருந்த பிரான்ஸ் ரொசாரியோ, எலிசபெத் மேரி இருவரையும் கட்டிப்போட்டு விட்டு, பீரோவில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட ஒய்வு பெற்ற ஆசிரியர் வீடு

இதுகுறித்து அவர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வங்கி மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் எம்.பி. குற்றவாளி எனத் தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details