தமிழ்நாடு

tamil nadu

கஞ்சா விற்கும் கும்பல்களுக்கிடையே மோதல்? பதறவைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Jul 12, 2021, 8:17 PM IST

வெள்ளக்கிணறு பகுதியில் இரு இளைஞர்களை ஒரு கும்பல் ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞரைத் தாக்கும் கும்பல் குறித்த காணொளி
இளைஞரைத் தாக்கும் கும்பல் குறித்த காணொளி

கோயம்புத்தூர்: ஊரடங்கு காலத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருள்களினால் குற்றச் செயல்கள் அதிகரித்துவருகின்றன. கோயம்புத்தூரில் இரு இளைஞர்களை ஒரு கும்பல் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இந்தக் காணொலிக்கும், கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுக்கும் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது.

இளைஞரைத் தாக்கும் கும்பல் குறித்த காணொலி

அந்த சிசிடிவி காட்சியில், இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கும் இரண்டு இளைஞர்களை, அவர்களுக்குப் பின்னால் வந்த கும்பல் வழிமறித்து சரமாரியாகத் தாக்குகிறது. ஆயுதங்களால் தாக்கியதில் பலத்த காயமடைந்த இரண்டு இளைஞர்களையும், அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

காவல் துறை விசாரணை

இளைஞர்களைத்தாக்கிய கும்பல் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவருவதாகவும், காயமடைந்த இருவரும் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் வேறு ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. கஞ்சா விற்பதில் தகராறு ஏற்பட்டு இதுபோல செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இளைஞரைத் தாக்கும் கும்பல்

இது குறித்து துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளும்போது உண்மைத் தகவல்கள் வெளிவரும்.

இதையும் படிங்க: கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற போலீஸை சுற்றிவளைத்த கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details