தமிழ்நாடு

tamil nadu

தனியார் பேருந்து மோதியதில் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது விபத்து!

By

Published : May 1, 2021, 10:43 PM IST

கோயம்புத்தூர்: தனியார் பேருந்து மோதியதில் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோயம்புத்தூருக்குத் தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றது. அப்போது காந்தி நகர் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் ஒன்று பேருந்தின் குறுக்கே வந்துவிட்டது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அதன் அருகே சென்ற ஆட்டோ மீது மோதியது.

சிசிடிவி காட்சி

இதில் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக ஆட்டோ ஒட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தற்போது இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பான நிகழ்வுகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: சரக்கு ஆட்டோ மீது கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 28 காயம்!

ABOUT THE AUTHOR

...view details