தமிழ்நாடு

tamil nadu

அன்னூரில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 1:31 PM IST

Heavy rain in Annur: கோவை அடுத்த அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் குளங்கள் நிரம்பியுள்ள நிலையில், சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

கோவை அருகே நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்
கோவை அருகே நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்

கோவை அருகே நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்

கோயம்புத்தூர்: நீலகிரி உள்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த 8, 9 மற்றும் 10ஆம் தேதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில், நேற்று (டிச.8) இரவு முதல் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக அன்னூர், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த பலத்த மழையால், அப்பகுதியில் உள்ள அன்னூர் குளம், ஒட்டார்பாளையம் குளம், ஊத்துப்பாளையம் குளம், கஞ்சப்பள்ளி குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பியது. இவ்வாறு குளங்கள் நிரம்பியதை அடுத்து, அவற்றில் இருந்து வெளியேறும் நீர் அன்னூர் - சத்தியமங்கலம் இடையேயான சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

அதன் காரணமாக, இந்த சாலையைக் கடக்கும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், குளத்தில் இருந்து வெளியேறும் நீர் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் செல்வதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும், தொடர் கனமழையால் குளங்களுக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அன்னூரில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதே வேளையில், கோவையின் நகர் பகுதிகளில், காலை முதல் லேசான சாரல் மழை மட்டும் பெய்து வருகிறது.

மேலும், கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால், அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், நீர் நிலைகளில் குளிப்பதற்காக இறங்கக்கூடாது எனவும் கோவை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மிக்ஜாம் புயலால் அனகாபுத்தூர் அடையாறு ஆற்றுப் பாலம் சேதம்.. 4வது நாளாக போக்குவரத்துக்கு தடை!

ABOUT THE AUTHOR

...view details