தமிழ்நாடு

tamil nadu

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி யானை உயிரிழப்பு - இறந்த குட்டியை தேடி அழையும் தாய் யானை!

By

Published : Apr 11, 2023, 10:24 PM IST

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் நான்கு மாதங்களில் 4 யானைகள் உயிரிந்தத நிலையில் தற்போது மீண்டும் ஒரு குட்டி யானை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

கோவையில் மீண்டும் ஒரு குட்டி யானை இறப்பு
கோவையில் மீண்டும் ஒரு குட்டி யானை இறப்பு

Baby Elephant drowned water tank and dead

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் ஆனைகட்டி பெரியநாயக்கன்பாளையம் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. வன விலங்குகளின் புகலிடமாக உள்ள இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாய பயிர் சேதங்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கோடை காலம் துவங்கிய நிலையில் வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சிக் காரணமாக கிராமப்பகுதிகளுக்கு காட்டு யானைகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெரியநாய்க்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கிராமத்திற்கு அருகேயுள்ள தடாகம் காப்புக்காட்டில் இருந்து குட்டியுடன் ஒரு தாய் யானை வெளியே வந்துள்ளது. வன எல்லையில் இருந்து சுமார் 180 மீட்டர் தொலைவில் நாயக்கன்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட அபராஜிதா என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்திற்குள் இரண்டு யானைகளும் சென்றுள்ளது.

அப்போது அந்த தோட்டத்து வீட்டின் கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் யானைக் குட்டி விழுந்து இறந்துள்ளது. தொட்டியில் இருந்து வீசிய துர்நாற்றத்தின் மூலம் குட்டி யானை தொட்டியில் விழுந்து உயிரிழந்தது அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து அவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர், அடங்கிய தனிக்குழுவினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் தொட்டிக்குள் மிதந்து கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த அந்த குட்டி யானையின் உடலை மீட்ட வனத்துறையினர் உடலைக் கைப்பற்றி குட்டி யானை எப்படி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்து என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த குட்டி யானையின் தாய் யானை அந்த தோட்டத்திற்கு அருகில் தன் குட்டி இறந்தது தெரியாமல் அப்பகுதியை சுற்றி திரிந்து கொண்டிருப்பது மக்களிடயே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. மேலும் காட்டு யானைகளின் உயிரிழப்பை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். யானைகள் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி யானை உயிரிழந்தது மற்றும் தன் குட்டியை பிரிந்து வாடி நிற்கும் தாய் யானையின் நிலை பரிதாபத்திற்குள்ளாகி உள்ளது.

இதையும் படிங்க:பேரழிவின் பிடியில் பாறு கழுகுகள்.. நாம் செய்ய வேண்டியது என்ன? -சு.பாரதிதாசன் சிறப்பு நேர்காணல்!

ABOUT THE AUTHOR

...view details