தமிழ்நாடு

tamil nadu

கோவை சுயம்வரம் நிகழ்ச்சியில் 'சொத்து' ஏலம்.. வைரலாகும் இளைஞரின் புலம்பல் வீடியோ!

By

Published : Nov 17, 2022, 1:38 PM IST

கோயம்புத்தூரில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் நம்ம ஜாதகத்துக்கு பொண்ணு கிடைக்குமா என புலம்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Etv Bharatநம்ம ஜாதகத்துக்கு பொண்ணு கிடைக்குமா -  குமுறும் கோவை மாப்பிள்ளையின் புலம்பல் வீடியோ
Etv Bharatநம்ம ஜாதகத்துக்கு பொண்ணு கிடைக்குமா - குமுறும் கோவை மாப்பிள்ளையின் புலம்பல் வீடியோ

கோயம்புத்தூர்: கோவையில் தனியார் மண்டபம் ஒன்றில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் சுயம்வரம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பங்கேற்று கொள்வதற்காக வந்த ஒரு இளைஞரின் புலம்பல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அந்த இளைஞர், 'தான் காலை எழுந்து மழையில் நனைந்தபடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த போது இங்கு அதிக கூட்டம் இருப்பதாகவும், அவர் கொண்டு வந்த ஜாதகம் உள்ளே சென்றடையுமா ? என்று கூறிய அவர் மாப்பிள்ளைக்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் உள்ளதா ? சொத்து உள்ளதா ? என கேள்வி கேட்டும் இவர்களிடத்தில் உள்ளது மணியா..! நாமக்கு பெண் கிடைக்குமா ? அங்கு உள்ளவர்களில் மாப்பிள்ளை வீட்டார் மட்டும் அதிக அளவில் உள்ளதாகவும், பெண் வீட்டார் சரியாக யாரும் வரவில்லை என்றும் புலம்புகிறார்.

நம்ம ஜாதகத்துக்கு பொண்ணு கிடைக்குமா - குமுறும் கோவை மாப்பிள்ளையின் புலம்பல் வீடியோ

ஒலிபெருக்கி மூலம் 25 ஏக்கர் முதல் கேட்டு கொண்டு இருந்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாப்பிள்ளை தனது சூழ்நிலையை கோவை தமிழில் யதார்த்தமாக கூறியுள்ளார். அருகில் இருந்த நண்பர்கள் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கொங்கு தமிழில் பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க:வேலைவாய்ப்பு... கைலாசா கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details