தமிழ்நாடு

tamil nadu

24% வட்டித்தருவதாக ஏமாற்றிய நபருக்கு ரூ.4.75 கோடி அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறை!

By

Published : Oct 4, 2021, 5:23 PM IST

வாடிக்கையாளர் முதலீடு செய்யும் பணத்திற்கு, 24% வட்டித்தொகைத் தருவதாகக் கூறி, 118 நபர்களிடம் ரூ. 4.74 கோடி வசூல் செய்த நபருக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.4.75 லட்சம் அபராதமும் விதித்து கோயம்புத்தூர் முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Judgement
Judgement

கோவை: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வமுத்து அவரது மனைவி பராசக்தி, நரசிம்மலு, ஞானவேல், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த குருசாமி, பெங்களூருவைச் சேர்ந்த கிரிஷ் குமார் ஆகியோர் இணைந்து, 2009ஆம் ஆண்டு 'அன்னை இன்போடெக்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அந்நிறுவனத்தில் பணம் முதலீடு செலுத்தினால், 24% வட்டித் தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.

'சின்னக்கல்லு பெத்த லாபம் - குறைந்த முதலீடு, அதிக வட்டி'

இதனை நம்பி 118 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.4 கோடியே 73 லட்சத்து 94 ஆயிரம் பெற்றுக்கொண்டு வட்டியையும் அசலையும் திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளனர்.

சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு

இதுகுறித்துப் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இதன்வழக்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு முதலீட்டார் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முக்கிய குற்றவாளியான செல்லமுத்துவிற்கு ரூ.4 கோடியே 75 லட்சம் அபராதமும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து செல்லமுத்து கோவை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: குலசை தசரா: கடற்கரையில் நடத்தலாமா என்பது குறித்து கலெக்டர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details