தமிழ்நாடு

tamil nadu

பொள்ளாச்சியில் சிறுமியை திருமணம் செய்ய முயன்ற இளைஞர் கைது!

By

Published : Apr 25, 2021, 9:47 PM IST

ஆனைமலை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் - இளைஞர் கைது
15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் - இளைஞர் கைது

பொள்ளாச்சி: ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இருவருக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியைப் பெண் கேட்டு, சந்திரசேகர் சிறுமியின் பெற்றோரிடம் அணுகி உள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக, சிறுமியைத் திருமணம் செய்து தர பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சமூக நலத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:போபாலில் 300 படுக்கைகள் கொண்ட 20 ரயில் பெட்டிகள்தனிமைப்படுத்தும் மையமாக மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details