தமிழ்நாடு

tamil nadu

பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு - தலைமையாசிரியர் நோட்டீஸ்!

By

Published : Jun 13, 2022, 3:59 PM IST

கோயம்புத்தூரில் தொடக்கப்பள்ளியில் மாணவா்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பரிசுத்தொகை திட்டத்தை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவித்துள்ளார்.

பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு- தலைமையாசிரியர் நோட்டீஸ்
பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு- தலைமையாசிரியர் நோட்டீஸ்

கோயம்புத்தூர்: சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டு லட்சுமிநாயக்கன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1952ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 15 மாணவ-மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக லட்சுமணசாமியும், ஆசிரியராக வைரவபாண்டி ஆகியோரும் பணியாற்றி வருகின்றனா். இந்தப் பள்ளியில் மாணவா்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே உள்ள நிலையில், மாணவா் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பரிசுத்தொகை திட்டத்தை அறிவித்திருக்கிறாா், தலைமை ஆசிரியா் லட்சுமணசாமி.

அதன்படி 2022-2023ஆம் கல்வியாண்டில் சேரும் மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாக துண்டுப் பிரசுரம் அச்சடித்து கிராமத்தில் விநியோகித்து வருகிறாா். மேலும் இந்த ஆண்டு எத்தனை மாணவா்கள் சோ்ந்தாலும் அவா்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், அரசுப்பள்ளியை நாடி அனைவரும் படிக்க வரவேண்டும் என்பதற்காகவும்; மாணவர்கள் வருகை அதிகரிப்பதற்காக இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நாங்கள் தான் எதிர்க்கட்சி: திரும்ப திரும்ப சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறது - அன்புமணியின் ஆதங்கம்...

ABOUT THE AUTHOR

...view details