தமிழ்நாடு

tamil nadu

கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து வசூல் - நபருக்கு 10 ஆண்டுகள் சிறை

By

Published : Oct 6, 2021, 10:41 PM IST

கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து வசூல்
கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து வசூல்

கோயம்புத்தூர்:ஈரோடு மாவட்டம் கம்புளியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் இரண்டு பேருடன் இணைந்து சரளை பகுதியில் பாஸ் பவுலட்ரி பாம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.

இவர் ஒரு லட்சம் முதலீடு செய்தால் நாட்டுக்கோழி கொடுத்து அதனை பராமரிக்க மாதம் 8000 ரூபாய் கொடுக்கப்படும்.

மேற்படி நிறுவனத்தில் VIP என்ற திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 9000 ரூபாய் வழங்கப்படும். வருட முடிவில் 9000 ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கப்படும். மூன்று வருடங்கள் முடித்து முதலீட்டு தொகை திருப்பி அளிக்கப்படும் என விளம்பரம் செய்துள்ளனர்.

கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து வசூல்

இந்நிலையில் 98 முதலீட்டாளர்களிடம் இருந்து 1 கோடியே 38 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்து விட்டு தலைமறைவானார். இதுகுறித்து பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

நபருக்கு 10 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேகர் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 76 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் குமார் என்பவரை வழக்கிலிருந்து விடுவித்த நீதிபதி ரவி உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து கோவை மத்திய சிறையில் சேகர் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் டாடா குழும தலைவர் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details