தமிழ்நாடு

tamil nadu

இளம் அறிவியலார் விருது - விண்ணப்பம் செய்யுங்கள்!

By

Published : Nov 14, 2019, 7:19 PM IST

சென்னை: 2018ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு இளம் அறிவியலார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu

விஞ்ஞானிகளை கவுரவிக்கும் விதத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இளம் அறிவியலார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதின் முக்கிய நோக்கம் தங்கள் துறையில் சிறப்பாக பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதாகும். இந்த விருதிற்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'அறிவியல் நகரம், 2018 ஆம் ஆண்டிற்கான ‘தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது’, ‘தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது’ மற்றும் ‘தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது’ ஆகியவற்றுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கான முன் மொழிதல் படிவம், விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் மற்றும் விதிகள் ஆகியவற்றை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இவ்விருதிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள அறிவியலாளர்கள் விண்ணப்பபடிவம், விண்ணப்பிக்க தேவையான அடிப்படை தகுதிகள் மற்றும் விதிகள் பற்றிய விவரங்களை www.sciencecitychennai.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிரப்பப்பட்ட முன் மொழிதல் படிவம் மற்றும் விண்ணப்பப் படிவத்தை அறிவியல் நகரத்திற்கு டிசம்பர் 20ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் தபால் மூலம் அல்லது நேரில் அளித்திட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களின் விருப்ப விருது பெற்ற அயர்ன் மேன் ஹீரோ, ஜெனிபர் ஆனிஸ்டன்

Intro:Body:தமிழ்நாடு இளம் அறிவியலார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:


அறிவியல் நகரம், 2018 ஆம் ஆண்டிற்கான“தமிழ்நாடுஇளம் அறிவியலாளர் விருது”,
“தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது” மற்றும் “தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர்
விருது” க்கு தாங்குதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கான
முன் மொழிதல் படிவம், விண்ணப்பப்படிவம், விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள்
மற்றும் விதிகள் ஆகியவற்றை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவ்விருதிற்கு
விண்ணப்பிக்க விருப்பமுள்ளஅறிவியலாளர்கள் விண்ணப்பபடிவம்,
விண்ணப்பிக்க தேவையான அடிப்படை தகுதிகள் மற்றும் விதிகள் பற்றிய விவரங்களை
www.sciencecitychennai.in என்ற இணையதளத்திலிருயது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிரப்பப்பட்ட முன் மொழிதல் படிவத்தை மற்றும் விண்ணப்பப் படிவத்தை அறிவியல்
நகரத்திற்கு டிசம்பர் 20 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் தபால் மூலம் அல்லது நேரில் அளித்திட
வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:

ABOUT THE AUTHOR

...view details