தமிழ்நாடு

tamil nadu

வங்கி ஊழியர் போல் பேசி நூதன மோசடி: பொதுப்பணித்துறை பெண் ஊழியர் புகார்

By

Published : Jul 23, 2021, 2:11 PM IST

வங்கி அலுவலர் போல பேசி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுப்பணித்துறை பெண் ஊழியர் புகார் அளித்துள்ளார்.

நூதன மோசடி
நூதன மோசடி

சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தட்டச்சராகப் (typist) பணியாற்றி வருபவர் மாலதி (30). சைதாபேட்டையைச் சேர்ந்த இவர் சேப்பாக்கம் எஸ்.பி.ஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறார்.

கிரெடிட் கார்டை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்காக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் மைய அலுவலர்களுக்கு அழைத்து கார்டை பிளாக் செய்ய கூறியுள்ளார். சிறிது நேரத்தில் ஒரு நபர் மாலதி செல்போன் எண்ணுக்கு அழைத்து, கிரெடிட் கார்டு பிளாக் ரிக்வெஸ்ட் வந்துள்ளது.

அதனால் தங்களது விவரங்களையும் ஓடிபி (OTP) எண்ணையும் தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் மாலதியும் தன் விவரங்களையும், ஓடிபி எண்ணையும் கொடுத்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த மாலதி அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி மின்னஞ்சல் மூலம் ரூ.25 ஆயிரம் மோசடி

ABOUT THE AUTHOR

...view details