தமிழ்நாடு

tamil nadu

ஆன்லைன் ரம்மியில் 20 சவரன் நகையைப் பணயம் வைத்து விளையாடிய பெண் தற்கொலை!

By

Published : Jun 6, 2022, 6:09 PM IST

Updated : Jun 6, 2022, 8:43 PM IST

ஆன்லைன் ரம்மியில் தனது 20 சவரன் நகை, லட்சக்கணக்கிலான பணம் ஆகியவற்றை இழந்த விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மியில் 20 சவரன் நகையைப் பணயம் வைத்து விளையாடிய பெண் தற்கொலை!
ஆன்லைன் ரம்மியில் 20 சவரன் நகையைப் பணயம் வைத்து விளையாடிய பெண் தற்கொலை!

சென்னைமணலி புதுநகர் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர், பவானி(29). இவர் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் (32) என்பவரை காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மெக்காட்டிக்பேரஸ் (3) நோயல்கிறிஸ்(1) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் பாக்கியராஜ் தனியார் நிறுவனத்திலும், பவானி கந்தன்சாவடியில் உள்ள தனியார் ஹெல்த் கேர் நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு பவானி அடிமையாகியுள்ளார். இதனால், பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதுகுறித்து, பவானியின் கணவர் மற்றும் பவானியின் குடும்பத்தினருக்கு தெரியவர, அவர்கள் பவானியை கண்டித்துள்ளனர். இருந்தாலும், பவானி தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் உச்சகட்டமாக, தனது 20 சவரன் நகையை விற்று அதில் வந்த பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.

இதில் பணத்தை இழந்த பவானி, தனது இரு தங்கைகளிடம் இருந்து தலா 1.5 லட்சம் ரூபாய் வீதம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, ரம்மி விளையாடியுள்ளார். அதிலும் பணத்தை இழந்த பவானி, மன உளைச்சலில் இருந்துள்ளார். தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனது தங்கை ஒருவரிடம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் பணத்தை இழந்ததைப் பற்றி தெரிவித்துள்ளார்.

தற்கொலையை கைவிடுக!

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் குளித்து விட்டு வருவதாகச் சென்ற பவானி, நீண்ட நேரமாகியும் குளியலறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணவர், கதவைத் திறந்து உள்ளே சென்றுபார்த்தபோது பவானி தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பவானியின் கணவர், பவானியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், பவானியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அரசு தரப்பிலும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் தரப்பில் ஆன்லைன் ரம்மி குறித்த விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையிலும், இதுபோன்ற விபரீத முடிவுகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன எனப் பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:தொடரும் ஆன்லைன் லோன் மோசடி- நூதன முறையில் மிரட்டிய வடமாநில கும்பல்

Last Updated : Jun 6, 2022, 8:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details