தமிழ்நாடு

tamil nadu

திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவி யாருக்கு ?

By

Published : Mar 2, 2022, 10:22 AM IST

திருச்சி மாநகரின் துணை மேயர் யார் என மில்லியன் டாலர் கேள்வி எழுந்து வந்த நிலையில் குழப்பம் சற்றே முடிவுக்கு வந்து விட்டதாக உடன்பிறப்புக்கள் காதைக்கடிக்கிறார்கள்.

திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவி யாருக்கு , திருச்சி மாநகராட்சி துணை மேயர் யார் ?
திருச்சி மாநகராட்சி துணை மேயர் யார் ?

திருச்சி:நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உதயசூரியன் உதித்துள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது மட்டுமல்லாமல் நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் பெருவாரியான வார்டுகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியிருக்கிறது.

இதனிடையே, திருச்சி மேயராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஜாதாவிற்குத்தான் துணை மேயர் என அடித்துச் சொன்னவர்கள் கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் ஆகியோர் தனிப்பட்ட முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டவுடன் கண்டிப்பாக இவர்தான் போல இருக்கிறது என ஆரூடத்தை அழுந்தச் சொல்ல ஆரம்பித்தனர்.

அதன்பின் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.


அட அட சரி சரி என மகிழ்ச்சியானதாம் சுஜாதா தரப்பு. ஆனால், முதலமைச்சரோ நேருவை நேராக கையைக்காட்டி அவரிடம் எதுவாக இருந்தாலும் நேராகப் பேசிக்கொள்ளுங்கள் என பொக்ரான் குண்டை போட்டு இருக்கிறார். இது என்னடா செட்டிநாட்டுக்கு வந்த சோதனை என நேருவிடம் பேசாமல் ப.சிதம்பரம் நேராகக் கிளம்பி விட்டாராம்.

அது சரி கவுன்சிலர்னாலும் அந்த அம்மா மேயர்னாலும் அந்த அம்மா துணை மேயர்னாலும் அந்த அம்மாவுக்கேவா என்னடா இது என்னவாம் இவங்க மட்டும்தான் திருச்சி காங்கிரஸில் இருக்கிறார்களா அதுவும் 56 ஓட்டு அதிகமா வாங்குனவங்களுக்காக ஏன் இப்படி என மகளிர் அணியினர் முணுமுணுக்க நஹி சொல்லி அனுப்பிய தகவல் கசியச் சந்தோஷத்தில் எதிர் கோஷ்டியாம்.

ஆக அடுத்த மேயர் யாரு தெரியுமானு கேள்வி கேட்டு பதிலையும் சொல்லிட்டாங்க, 33வது வார்டில் போட்டியிட்ட திவ்யாவாம்பா மதியழகன்னுதான் அடிச்சு சொன்னாங்களே என்னவாச்சாம் அந்த கதையெல்லாம் இப்ப எதுக்கு இன்னைக்கு பதவியேத்துக்கறாங்க இல்ல அப்ப அவங்களை கூர்ந்து பார்த்தாலே தெரிஞ்சுடப்போகுது.

திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவி யாருக்கு ?

அத்தோட தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் உட்பட அனைவரின் டெப்பாசிட்டையும் காலி பண்ணிட்டாங்க, இவங்க மகேஷ் அணியா இல்ல நேரு அணியா இவங்க திமுக அணி இப்படி உன்னைப்போல ஒரு பிணியை என் தோல்ல போட்டுகிட்டு சுத்திக்கிட்டே இருக்கேன் பாரு அந்த சூரிய பகவான்தான் என்ன காப்பாத்தணும். நீங்க சொல்றதை சொல்லிட்டீங்க 4ம் தேதி பார்ப்போம் என மலைக்கோட்டை மாநகரில் குரல்கள் கேட்கிறது.

இதையும் படிங்க: Maha Shivaratri: அகோரகாளி கோயிலில் அகோரிகளின் பூஜை

ABOUT THE AUTHOR

...view details