தமிழ்நாடு

tamil nadu

அடுத்த 3 நாள்களின் வானிலை நிலவரம் என்ன?

By

Published : Dec 24, 2021, 1:56 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவுரம்
வானிலை நிலவுரம்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், "டிசம்பர் 27, 28ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலை எச்சரிக்கை

டிசம்பர் 24 முதல் 25 வரை: உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாகக் காணப்படும்.

மூடுபனி எச்சரிக்கை

டிசம்பர் 24 முதல் 25 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர்ப் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வறண்ட வானிலை காணப்படும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details