தமிழ்நாடு

tamil nadu

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் : மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்

By

Published : May 3, 2021, 10:54 PM IST

Updated : May 4, 2021, 1:11 PM IST

சென்னை: அக்னி நட்சத்திரம் என சொல்லக்கூடிய கத்திரி வெயில் இன்று (மே. 4) முதல் தொடங்கியது. மேலும் இது 24 நாள்கள் தொடர்ந்து வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.

weather-in-tamilnadu-sunny-season
weather-in-tamilnadu-sunny-season

கோடைகாலம் ஏற்கனவே தொடங்கி பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், கத்திரி வெயில் காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே வெயிலின் தாக்கம் கடலூர், சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாகவுள்ளது.

சுட்டெரிக்க வாய்ப்புண்டு

சுட்டெரிக்க வாய்ப்புண்டு

இந்த மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கும் மேல் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தாலும், கடந்த நாள்களில் சில மாவட்டங்கள் நல்ல மழைப்பொழிவினை பெற்றிருக்கின்றன. இதுகுறித்து, கே. ஸ்ரீகாந்த், வானிலை ஆய்வு மைய வல்லுநர் கூறுகையில் "அடுத்த ஒரு வாரத்திற்கு இதே வெப்பநிலை தாக்கம் இருக்கும். ஒரு வாரம் கழித்து சில மாவட்டங்களில் 40 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்க வாய்ப்புண்டு. இதனால் பகல் நேரத்தில் அனல் காற்று வீசி இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக இருக்கும்" என கூறினார்.

மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்

மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நம்மிடம் கூறுகையில் "கத்திரி வெயிலுக்கும் வானிலை அறிவியலுக்கும் தொடர்பு இல்லை. எனினும் மே மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர் செங்குத்தாக விழும். எனவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதைத்தான் பஞ்சாங்கத்தில் அக்னி நட்சத்திரம் என்கிறார்கள். இந்தக் கால கட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம். சென்னையை பொறுத்தவரை வெப்பத்தின் தாக்கமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதே போல மழைக்கும் வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை!

Last Updated :May 4, 2021, 1:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details