தமிழ்நாடு

tamil nadu

நடிகர் அஜித்தின் வீட்டு சுற்றுச் சுவர் இடிப்பு! அதிகாரிகள் கொடுத்த விளக்கம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 7:25 AM IST

சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டு சுற்றுசுவர் இடிக்கப்பட்டு உள்ளது. சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

wall-of-tamil-superstar-ajiths-chennai-home-demolished
ஆசை ஆசையாக கட்டிய நடிகர் அஜித்குமாரின் வீட்டு சுற்றுச் சுவர் இடிப்பு !

சென்னை:ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜீத் குமாரின் வீட்டு சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு உள்ளது. ஈஞ்சம்பாக்கம் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் வாறுகால் அமைக்கும் பணி நடந்து வருவதால் நடிகர் அஜித் குமாரின் வீட்டு சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் கடந்த 2017 ஆம் ஆண்டு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் வீட்டில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். ஈஞ்சம்பாக்கம் வீடு நடிகர் அஜித் குமாருக்கு மிகவும் விருப்பமான வீடு என்றே கூறப்படுகிறது.

சென்னை திருவான்மியூரில் இருந்த அஜீத்குமார் தற்போது குடும்பத்துடன் ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஈஞ்சம்பாக்கத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பல வீடுகளின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக தான் நடிகர் அஜீத் குமாரின் வீட்டின் சுவர் இடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் அஜீத் குமாரின் வீட்டிற்கு வெளியே பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதால், வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்று வர ஏதுவாக தற்காலிகமாகப் பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் உலக சுற்றுலாவை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் அஜித், விடாமுயற்சி படத்திற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:திருவண்ணாமலை தான் திமுகவுக்கு திரும்பம் தந்தது.. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details