தமிழ்நாடு

tamil nadu

செங்கல்பட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபைக்கூட்டம்!

By

Published : Apr 24, 2022, 10:22 PM IST

Updated : Apr 25, 2022, 9:30 AM IST

கரோனா தொற்றிற்குப் பிறகு இன்று (ஏப்.24) நடந்த கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கிராமசபை கூட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கிராமசபை கூட்டம்

சென்னை:கரோனா தொற்றின் காரணமாக நடத்தப்படாமல் இருந்த கிராமசபைக் கூட்டம் தமிழ்நாட்டில் இன்று (ஏப்.24) நடத்தப்பட்டது. 'பஞ்சாயத்து ராஜ்' தினத்தை முன்னிட்டு 24ஆம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. சிறப்பு கிராமசபைக்கூட்டம் நடத்துவது குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

அதில், “பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து, உறுதிமொழி ஏற்கவேண்டும். கிராம சபைக்கூட்டம் நடத்தப்படுவதை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், கரோனா பரவல் காரணமாக கிராமசபைக் கூட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. தற்போது கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் கிராமசபைக் கூட்டம் இது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீபெரும்புத்தூர் ஒன்றியம், செங்காடு ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். செங்கல்பட்டு, திருப்போரூர், பொன்மார் ஊராட்சிகளில் நடைபெற்ற தேசிய கிராமசபைக் கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்துகொண்டார்.

அதேபோல் மாவட்டங்களில் அமைச்சர்கள் கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர். மாவட்ட ஆட்சியர்களும், உள்ளாட்சித்துறை அலுவலர்களும் கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் கிராமத்திற்குத்தேவையான முக்கியப்பணிகளை நிறைவேற்றுவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு, அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சென்னையில் கிராமசபைக் கூட்டம் குறித்து கூறும்போது, ஆண்டிற்கு 4 முறை என இருந்ததை அதிகரித்து 6 முறையாக மாற்றியதற்கு வரவேற்பு தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:'திமுக அரசு சொன்னதைத் தான் செய்யும், செய்வதைத் தான் சொல்லும்' - மீண்டும் உரக்க உரைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Apr 25, 2022, 9:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details