தமிழ்நாடு

tamil nadu

'தமிழர்களின் வேலைவாய்ப்பு தட்டிப்பறிப்பு' -வேல்முருகன்

By

Published : May 21, 2019, 7:47 PM IST

Updated : May 21, 2019, 8:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி தெரியாதவர்களை பணியமர்த்தினால், அவர் எப்படி தமிழ் மக்களுக்கு சேவை புரிவார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வியெழுப்பி உள்ளார்.

velmurugan

தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பை தமிழர்களிடமிருந்து தட்டிப் பறிக்கும் வகையில் வடஇந்தியர்களை தமிழ்நாட்டில் மத்திய அரசு அனுமதிப்பதாகவும், மாநில அரசு அதற்கு துணை போவதாகவும் கூறி எல்.ஐ.சி பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் சார்பில் சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். 2011 முதல் 2017 வரை மத்திய அரசின்கீழ் வரும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிறப்பு புலனாய்வு பிரிவுகளில் உள்ள 60 ஆயிரம் பணியிடங்களில், ஒரு தமிழர் கூட இடம்பெறவில்லை. பிற மாநிலங்களில் இந்தத் தேர்வுகள் அந்தந்த மாநில தாய்மொழியில் நடத்தப்படும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் நடத்தப்படுவதே இதற்குக் காரணம்" என்று குற்றம் சாட்டினார்.

மேலும், "2006ஆம் ஆண்டுக்கு முன் வரை தமிழ்நாட்டில் காலியாக உள்ள மத்திய அரசு பணியிடங்களுக்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் அது மாற்றியமைக்கப்பட்டதால் தமிழகர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது. 2014ஆம் ஆண்டு ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் தமிழில் உள்ளது என்பதாலேயே நிராகரிக்கப்பட்டன. ஆனால் பிற மாநிலங்களில் இருந்த இடத்திலிருந்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன" என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் பேசிய அவர், "யூ.பி.எஸ்.சி தேர்வில் தமிழர்கள் தேர்ச்சி பெற்று பணியாற்றிவரும் நிலையில் மத்திய அரசின் ரயில்வே துறை, அஞ்சல் துறை போன்ற துறைகளின் சாதாரண பணிக்கு புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழ் மொழி தெரியாதவர்களை அரசு அலுவகங்களில் பணி அமர்த்தினால் அவர் எப்படி தமிழ் மக்களின் மொழியை புரிந்துகொண்டு அவர்களுக்கு சேவை புரிவார். இன்று எல்.ஐ.சியில் வெடித்த இந்த ஆர்ப்பாட்டம் நாளை ஆயக்கர் பவன், சாஸ்திரி பவன், இந்தியன் வங்கி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட இடங்களிலும் வெடிக்கும் என்பது உறுதி" என்று வேல்முருகன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பை தமிழர்களிடமிருந்து தட்டி பறித்து வடஇந்தியர்களை தமிழகத்தில் அனுமதிக்கும் இந்திய அரசு மற்றும் அதற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்து எல்.ஐ.சி பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் சார்பில் சென்னை அண்ணாசாலை எல்.ஐ.சி அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், "தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்.

கடந்த 2011 முதல் 2017 வரை மத்திய அரசின் 60 ஆயிரம் பணியிடங்களானவருமான வரித் துறை, அமலாக்கத்துறை, சிறப்பு புலனாய்வு பிரிவுகளில் ஒருவர் கூட தமிழர் இடம்பெறவில்லை. இந்து துறைகளில் பணியாற்றி வருப் தமிழர்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை. இதிலிருந்து நாங்கள் விழித்துக் கொண்டோம் என்ற விதத்தில் தான் எல்.ஐ.சி நிறுவனத்தின் எஸ்.சி, எஸ்.டி அமைப்பினர் இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

100 சதவிதத்தில் 90 சதவிகித தமிழர்கள் ரயில்வே துறையிலிருந்து வெளியேற்றப்பட்டதால் தற்போது மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தில் வேலை செய்து வரும் தமிழர்கள் வெளியேற்றப்படுவார்களோ என் அச்சம் நிலவி வருகிறது.

மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ யில் கடந்த மாதம் நிரப்பிய 1400 பணியிடங்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை. தேர்வுகள் தமிழில் நடத்தப்படாமல் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் நடத்தப்படுவதே இதற்கு காரணம். மற்ற மாநிலத்தில் இந்த தேர்வுகள் அவர்களது தாய்மொழியில் நடத்தப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு
ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் தமிழில் உள்ளது என்பதால் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் பிற மாநிலங்களில் இருந்த இடத்திலிருந்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. தாய்மொழி தமிழில் கல்வி பெற்ற மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

2006 ஆம் ஆண்டுக்கு முன் இங்கு காலியாக இருக்கும் மத்திய அரசு துறையின் பணியிடங்கள் மண்டல அளவில் மட்டுமே நடத்தப்பட்டு இங்கிருக்கும் பூர்வ குடிமக்களான தமிழர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படௌடனர். 2006 ஆம் ஆண்டுக்குப் பின் இங்கிருக்கும் காலி பணியிடங்களுக்கு தேசம் முழுவதும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற முறையை கொண்டுவந்தனர். இதனால் தமிழில் விண்ணப்பிக்கும் தமிழர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

கர்நாடகாவில் அனுமதியின்றி மைல் கல்லில் இந்தியில் எழுதியதை அம்மாநில முதல்வர் சென்று அழித்தார். பீகார் போன்ற இடங்களிலிருந்து வரும் லாரி ஓட்டுநர்களுக்கு ஆங்கிலமும், தமிழும் தெரியாது அதனால் மைல் கல்லில் இந்தியில் எழுத வேண்டும் என்று கூறும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். அவரை பார்த்து கேட்கிறேன் எம் தமிழ் லாரி ஓட்டுநர்கள் பீகார் போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது அவர்கள் படிக்க ஏதுவாக மைல் கல்லில் தமிழில் எழுத்துகள் எழுதப்படுகிறதா.

யூ.பி.எஸ்.சி தேர்வில் தமிழர்கள் ஒரு காலத்தில் 15 முதல் 18 சதவிகிதம் வரை தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகளில் பணியாற்றினார்கள். தற்போது கூட 5 முதல் 8 சதவிகிதத்திற்கு குறையாமல் தேர்ச்சி பெற்று பணியாற்றி வருகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் அதே தமிழன் மத்திய அரசின் ரயில்வே துறை, அஞ்சல் துறை போன்ற துறைகளின் சாதாரண பணிக்கு புறக்கணிக்கப்படுகிறான். பட்டங்களை கையில் வைத்து கொண்டு வேலைக்கு அலைகிறான்.

தற்போது தமிழ்நாடு தகுதி தேர்விலும் வேற்று மொழி பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கொண்டு வந்துள்ளனர். இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்து வரும் எடப்பாடி அரசை பார்த்து கேடௌகிறேன் தமிழ் மொழி யை தெரியாதவனை அரசு அலுவகங்களால் பணி அமர்த்தினால் அவன் எப்படி என் மக்களின் மொழியை புரிந்துகொண்டு அவர்களுக்கு சேவை புரிவான்.

எனவே தான் கடந்த 7 வருடங்களாக இந்த போரட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கையிலெடுத்து போராடி வருகிறது. தற்போது பிரதான எதிர்க்கட்சி லைவரான மு.க.ஸ்டாலினும் மத்திய அரசு துறைகளில் 90 சதவிகித தமிழருக்கு வேலை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் பற்ற வைத்த சிறிய நெருப்பு தீயாக பரவி கொண்டே போகும். அந்த வகையில் இன்று எல்.ஐ.சி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் எஸ்.சி, எஸ்.டி அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு அளித்து வரவேற்கிறது.

இன்று எல்.ஐ.சி யில் வெடித்த இந்த ஆர்ப்பாட்டம் நாளை ஆயக்கர் பவனிலும், சாஸ்திரா பவனிலும், இந்தியன் வங்கியிலும், நெய்வேலி நிலக்கரியில் வெடிக்கும் என்பது உறுதி. தமிழர்களுக்கு இறுதி வெற்றி கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

Last Updated : May 21, 2019, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details

தொடர்புடைய கட்டுரைகள்