தமிழ்நாடு

tamil nadu

சென்னை மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் வாகன பாஸ் அறிமுகம்

By

Published : Jan 31, 2023, 6:51 AM IST

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு உறுப்பினர்களுக்கும் கியூ ஆர் கோடுடன் கூடிய வாகன பாஸ் வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் வாகன பாஸ் அறிமுகம்!
சென்னை மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் வாகன பாஸ் அறிமுகம்!

சென்னை மாநகராட்சியின் சமீபத்திய மாமன்ற கூட்டத்தில், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் மூலம் பாஸ் வழங்கப்படுவதுபோல, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வாகனங்களுக்கும் பாஸ் வழங்க வேண்டும் என்று ஒரு சில கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட சென்னை மாநகராட்சி, கவுன்சிலர்களுக்கு நேற்று (ஜன.30) வாகன பாஸ் வழங்கி உள்ளது. இந்த வாகன பாஸ், கியூ ஆர் கோடுடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், கவுன்சிலரின் பெயர், வார்டு எண், மண்டலம், முகவரி, தொடர்பு எண் மற்றும் செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும். சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சி, கவுன்சிலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:‘கவுன்சிலர்களுக்கும் ஊதியம் என்ற நல்ல செய்தி விரைவில் வரும்’

ABOUT THE AUTHOR

...view details