தமிழ்நாடு

tamil nadu

‘டிசம்பர் 27ஆம் தேதி முதல் காய்கறி வாகனங்கள் இயங்காது’ - லாரி உரிமையாளர்கள் சங்கம்!

By

Published : Dec 19, 2020, 3:24 PM IST

சென்னை: திருவேற்காடு அருகே லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் காய்கறி வாகனங்கள் இயங்காது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நடத்திய ஆலோசனை கூட்டம்
லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நடத்திய ஆலோசனை கூட்டம்

சென்னை: திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்:

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தலைவர் குமாரசாமி, “வாகனங்களுக்கு பொருத்தப்படும் ஸ்பீடு கவர்னர், ஸ்டிக்கர்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் டிசம்பர் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்.

லாரிகள் இயங்காது:

இதில் காய்கறி வாகனங்கள் இயங்காது. பால், டீசல், மெடிக்கல் வாகனங்கள் மட்டுமே இயங்கும். தமிழ்நாடு முழுவதிலும் 12 லட்சம் வாகனங்கள் செயல்படாது. இதனால், 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான வருவாய், அரசுக்கு ஏற்படவுள்ளது. அரசு எங்களை அழைத்து சுமுக பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நடத்திய ஆலோசனை கூட்டம்

இல்லையெனில் அத்தியாவசிய பொருள்களுக்கு இயங்கிவரும் லாரிகளை காலவரையின்றி நிறுத்தவும் முடிவெடுக்கப்படும். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

ABOUT THE AUTHOR

...view details