தமிழ்நாடு

tamil nadu

பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படும் - திருமாவளவன் எம்பி

By

Published : Feb 23, 2021, 9:04 PM IST

சென்னை: பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thirumavalavan
திருமாவளவன்

அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நலச் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி அடிப்படையிலான அட்டவணையில் நிரப்பப்படாத பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியும், பிற்படுத்தப்பட்டோருக்கு அனைத்து துறைகளிலும் சிறப்பு சேர்க்கை நடத்த வேண்டும், அரசியல் சட்டத்திற்கு எதிரான க்ரீமி லேயர் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது. அதில் கைவைக்க முடியாது. இடஒதுக்கீடுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எப்படி உங்களுக்கு நட்பு சக்தியாக இருக்க முடியும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவர்களை பார்த்து நான் கேட்கிறேன். பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படும். மோடி, அமித்ஷா எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சங்பரிவார் அமைப்புகளின் கருத்துக்களைதான் கேட்பார்கள். பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடுக்கும் ஆபத்து வரும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details