தமிழ்நாடு

tamil nadu

மும்மொழிக் கொள்கைக்கு நோ சொன்ன வைரமுத்து!

By

Published : Aug 1, 2020, 2:04 PM IST

இருமொழி கொள்கையை எடப்பாடி பழனிசாமி அரசு தாங்கி பிடிக்க தயங்க தேவையில்லை என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

வைரமுத்து
வைரமுத்து

புதிய கல்விக் கொள்கை குறித்த விவரங்களை மத்திய அரசு ஜூலை 29ஆம் தேதி வெளியிட்டது. ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி கல்வி கட்டாயம், டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், உயர் கல்வி நிறுவனங்களில் சேர, தேசிய கல்வி முகமை மூலம் பொது நுழைவுத் தேர்வு, மும்மொழி கொள்கை என பல முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மும்மொழி கொள்கையை விமர்சித்துள்ள கவிஞர் வைரமுத்து, முதலமைச்சர் பழனிசாமி அரசு இருமொழி கொள்கையை தாங்கிப் பிடிக்கத் தயங்க தேவையில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும்,

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும்

இருமொழிக் கொள்கைதான்.

முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத்

தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை.

தேசியக் கொடியை மதிப்போம்;

திராவிடக் கொடியும் பிடிப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.

மும்மொழி கொள்கையின்படி, மூன்றாவது விருப்ப மொழி பட்டியலில் சமஸ்கிருதம், தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது. எந்த மொழியும் கட்டாயப்படுத்தபடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கனவுடன் போராடிய மாணவர்; பக்ரீத் பரிசாக பந்தய சைக்கிளை அளித்த குடியரசுத் தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details